Ad Code

Responsive Advertisement

'தல-தளபதியால்' நெருங்க கூட முடியாத ரஜினியின் சாதனை...! பவர் ஆஃப் சூப்பர் ஸ்டார்...


தமிழக அளவில் வேண்டுமானால் நடிகர் அஜித் மற்றும் விஜய் தன்னை நெருங்கி இருக்கலாம், ஆனால், உலக அளவில் நான் தான் வசூல் மன்னன் என சொல்லாமல் சொல்லி அடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

உலக அளவில் நடிகர் ரஜினிக்கான மவுசு நாம் அறிந்ததே. இந்திய ரசிகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளங்கள் பிற நாடுகளிலும் ரஜினிக்கு உள்ளது.

இதன் காரணமாக இவரது திரைப்படங்கள் உலக அளவில் வசூலை வாரி குவிக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக நிரூபிக்கும் பட்சத்தில் ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது, உலக புகழ் பெற்ற இணையதளமான IMDP.

அதன் படி, உலக அளவில் அதிக வசூலை குவித்த முதல் மூன்று தென்னிந்திய திரைப்படங்கள் பற்றி தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட பட்டியலில் சூப்பர் ஸ்டாரின் '2.O' - 675 கோடி வசூலுடன் முதல் இடத்திலும், விஜயின் 'சர்கார்' - 257 கோடி வசூலுடன் இரண்டாம் இடத்திலும், 'KGF'- 230 கோடி வசூலுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Also Read | 'விஸ்வாசம்' நெருங்க கூட முடியாத விஜயின் சாதனை... மாஸ் காட்டும் ரசிகர்கள்   

இதன் மூலம், தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களாக விளங்கும் அஜித் மற்றும் விஜயின், விஸ்வாசம் - சர்கார் திரைப்படங்களின் வசூலை கூட்டினால் கூட 2.0 வின் வசூலை நெருங்க முடியாது என்பது தெளிவாக தெரியவந்துள்ள பட்சத்தில், உலக அளவில் வசூலில் தான் தான் கில்லி என நிரூபித்து காட்டி இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.