பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் கனவில் கூட நினைத்து பார்க்காத அளவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துவிட்டார் நடிகை ஓவியா.
வெளிப்படையான பேச்சு, பிறருக்கு தீங்கு நினைக்காத குணம், அநீதியை கண்டு பொங்கி எழுவது என திரையில் மட்டுமல்லாது நிஜத்திலும் தான் நாயகிதான் என அந்நிகழ்ச்சியில் அவர் நிரூபித்ததே இந்த பிரபலத்திற்கு காரணம்.
என்றாலும் அனைத்திற்கும் ஒரு எல்லையும் உண்டு என்பதும் ஒப்புக்கொள்ளவேண்டிய ஒன்று. வெளிப்படையாக பேசுகிறேன் என தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான வசனங்களை பேசி, அருவருக்கத்தக்க காட்சிகளில் நடித்த கிடைத்த பெயரை 90ml திரைப்படத்தின் மூலம் கெடுத்துக்கொண்டார் ஓவியா.
அத்திரைப்படம் ஏற்படுத்திய அவப்பெயரே இன்னும் மறையாத நிலையில், மீண்டும் அதே பாணியில் ஒரு திரைப்படத்தில் நடித்து இருக்கிறாராம் ஓவியா. 'கணேஷா மீண்டும் சந்திப்போம்' எனும் குறிப்பிட்ட திரைப்படத்தில், ஆபாசமான வசனங்களை பேசும் பெண்ணாக வலம்வர இருக்கிறாராம் இந்த பிக்பாஸ் பிரபலம்.
Social Plugin