பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து விட்டார் நடிகை ஓவியா. இதனால் எக்கச்சக்க பட வாய்ப்புகள் வந்தும் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான '90ml' திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே இளசுகளிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கிடையே சினிமா தாண்டி தனக்கு வந்த பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை பற்றி முதன் முதலாக வெளியே சொல்லி இருக்கிறார் ஓவியா.
எக்கச்சக்க படவாய்ப்புகள் வந்தும் ஏன் ஒரு சில படங்களில் மட்டும் ஒப்பந்தமாகி இருக்கிறீர்கள் என்ற கேள்வியினை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் எதிர்கொள்ள, 'பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. மனதிற்கு பிடித்த கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிக்கிறேன்'.
மேலும் கோடிகளை கொட்டி கொடுப்பதாக கூறி அரசியலில் பிரச்சாரம் செய்யவும் முன்னணி கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தது. என்றாலும் அதனை நான் ஏற்கவில்லை. எத்தனை கோடி கொடுத்தாலும் அரசியல் பக்கம் செல்லமாட்டேன்.' எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தீயாய் பரவும் ஆபாச காணொளி... கடும் கோபத்தில் சாய்பல்லவி
Social Plugin