90ml திரைப்படத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து, நடுத்தர வயது ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார் நடிகை ஓவியா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது வெளிப்படையான குணத்தினால் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கவர்ந்தவர் நடிகை ஓவியா. அதே ரசிகர்கள் இப்பொழுது, 'இருந்தாலும் இம்புட்டு வெளிப்படை ஆகாது' என முகம் சுளிக்கவும் வைத்திருக்கிறார் ஓவியா.
சரக்கு, தம், கஞ்சா அடிப்பது என, தமிழ் கலாச்சாரத்தில் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என விதிக்கப்பட்டுள்ள, அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டு நான் தமிழச்சி என பேசும் வசனத்திற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
என்னதான் ஒருபுறம் இந்த மாதிரியான விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும், 90ml திரைப்படத்தை தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர் இருட்டு அறையில் முரட்டு குத்து ரசிக பெருமக்கள்.
Social Plugin