Ad Code

Responsive Advertisement

போட்டோவுக்காக பாதுகாப்பு விதியை மீறிய நிவேதா பெத்துராஜ்... ரசிகர்கள் கொந்தளிப்பு


வரலாற்று சிறப்பு மிக்க மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் சென்ற வருடம் நிகழ்ந்த தீ விபத்திற்கு பின் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கோவிலுக்குள் செல்போன்களுக்கு அனுமதி இல்லை. சோதனைக்கு பின்னரே பக்தர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். ஆனால் நடிகை நிவேதா பெத்துராஜோ, கோவிலுக்குள் அமர்ந்து பிரசாதம் உண்ணுவதை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனை கண்டு அதிர்ந்த ரசிகர்கள் 'நீங்கள் மட்டும் எவ்வாறு செல்போனை உள்ளே எடுத்து சென்றீர்கள். நடிகை என்பதனால் ஸ்பெஷல் அனுமதியா? இப்படித்தான் இருக்கிறது கோவில் பாதுகாப்பு' என கருத்துக்களால் வாட்டி எடுக்க துவங்கிவிட்டனர்.



இன்னும் போனால், பெரிய அளவில் பிரச்னை வரும் என சுதாரித்துக் கொண்ட அவர், குறிப்பிட்ட புகைப்படத்தை தனது பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.