நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை கொண்ட சைக்கோ ஒருவரினால் நடத்தப்பட்ட வெறியாட்டத்தினால் 49பேர் கொடூரமாக மாண்ட காணொளிதான் அது.
ஹாரிசன் டர்ரன்ட் என்ற கொடூரனின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு நேரடி வீடியோ ஒளிபரப்பாகிறது, வழக்கமான வாழ்க்கை சார்ந்த ஒன்றாக இருக்கலாம் என அதனை கண்டவர்களுக்கு அதிர்ச்சி.
கார் நிறைய துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் நியூசிலாந்தின் 'அல் நூர்' தர்காவில் நுழையும் அவன், வாசலில் நின்று வரவேற்கும் முதியவரை சுட்டு வீழ்த்துகிறான்.
அதன் பின் நடப்பது என்னவென்று சுதாரித்து கொள்வதற்குள், கொத்து கொத்தாக, உள்ளே தொழுகையில் ஈடுபட்டிருந்த அனைவரையும் கொன்று குவிக்கிறான்.
அருகாமையில் அமைந்திருந்த மற்றொரு தர்காவிலும் இவன் வெறியாட்டம் தொடர , சுமார் 49பேர் கொல்லப்பட்டதுடன், 11 பேருக்கும் மேல் உயிருக்கு போராடி வருகின்றனர்.
படாத பாடு பட்டு, போலீசார் அவனை பிடித்து விட்டாலும், இந்த கோர சம்பவத்தினால் வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் இடையே பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உள்ள திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. மறுபுறம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல்களும், உதவிகளும் குவிந்து வருகிறது.
Social Plugin