Ad Code

Responsive Advertisement

வெளியான 1 மணி நேரத்திலேயே சாதனை.. அசத்தும் நேர்கொண்ட பார்வை


#NerkondaParvai #FirstLook #Ajith 

H. வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் பெயர் மற்றும் முதற்பார்வை போஸ்டர் நேற்று இரவு வெளியானது.

பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படம் குறித்த இத்தகைய தகவல்கள் பல வார முன்னறிவிப்பிற்கு பின்னே வெளியிடப்படுவது வழக்கம். ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற செய்து விளம்பரம் தேடும் இந்த வழக்கத்திற்கு மாறாக, திடீரென வெளியானது 'நேர்கொண்ட பார்வை' என்ற படத்தின் பெயரும், அதில் அசத்தலாக அஜித் தோன்றி இருக்கும் புகைப்படமும்.

இதனை வழக்கம் போல ரசிகர்களும் கொண்டாடி வரும் நிலையில், வெளியான 1 மணி நேரத்திற்குள்ளாகவே இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட ஒன்றாக ட்விட்டரில் முன்னணி இடத்தினை பிடித்தது.

இப்பொழுது வரை சுமார் ஒரு லட்சம் முறை பேசப்பட்ட டாபிக் ஆக 'நேர்கொண்ட பார்வை' தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

13 வருடங்கள் எவரும் படைத்திடாத சாதனை...  பட்டையை கிளப்பிய 'விஸ்வாசம்'