Ad Code

Responsive Advertisement

'நேர்கொண்ட பார்வை' வசூல் சாதனை புரிவது உறுதி.... பக்கா ஸ்கெட்ச் போட்ட போனிகபூர்


அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வசூலை வாரிகுவிக்கும்படி ரிலீஸ் தேதிதியை பக்காவாக திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

முன்னதாக அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் வசூலில் மாபெரும் லாபத்தை ஈட்டியது. அதற்கு அடுத்தடுத்து இருந்த பொங்கல் விடுமுறையே காரணமாகவும் அமைந்தது.

இப்பொழுது அதே பாணியை 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்திற்கும் கையில் எடுத்திருக்கிறது படக்குழு. அதாவது சமீபத்தில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது.

அதாவது 10 மற்றும் 11ம் தேதி சனி, ஞாயிறு வார விடுமுறைகள் ஆகும். 12ம் தேதி பக்ரீத் பண்டிகையை ஒட்டியும், 15ம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டியும் அரசு விடுமுறைகள். மீண்டும் 1 நாள் இடைவெளியில் வார விடுமுறை வந்து விடுவதால், ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுக்க ஏதுவாக அமைந்துவிட்டது.

இதனால் அஜித் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுவது உறுதி, மேலும் படத்தின் ரிசல்ட்டும் பாசிட்டிவ்வாக அமைந்துவிட்டால், நேர்கொண்ட பார்வையும் வசூல் சாதனை புரிவது என்னமோ உறுதிதான்.