கடின உழைப்பின் காரணமாக, திரைத்துறையில் ஜெயித்து பலர் வியக்கும் பிரபலமாக வலம்வருபவர் அஜித். இன்று இவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு தான் என்ன சொன்னாலும் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள்.
என்றாலும் அவ்வகைகளில் தனது செல்வாக்கினை தவறாக பயன்படுத்தாமல், இயக்குனர் என்ன சொன்னாலும் தவறாது நடிப்பவர் அஜித். சில சமயங்களில் இயக்குனரே 'நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம்' என சொல்லும் காட்சிகளிலும், 'டூப் போட்டு நடித்தால் நன்றாக இருக்காது' என தானே நடித்து அசத்தி இருக்கிறார்.
அப்படியொரு சம்பவம், போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும், 'நேர்கொண்ட பார்வை' திரைப்பட படப்பிடிப்பிலும் நிகழ்ந்திருக்கிறது. அமிதாப் பச்சன் நடித்து மாபெரும் வெற்றிப்படமான 'பிங்க்'ன், ரீமேக் ஆக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் சண்டை காட்சி அண்மையில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
Also Read | சும்மா இருக்குறவன வம்புக்கு இழுக்காதீங்க...! புலம்பும் தல
கொட்டும் மழையில் பக்கா அதிரடியுடன் உருவாக இருந்த அந்த சண்டை காட்சியில் மழையில் நனைந்தவாறே, சில ரிஸ்க்கான அசைவுகளை செய்யும் படி இருந்ததாம். இதனால் படக்குழுவும் டூப் வைத்து அக்காட்சிகளை பதிவு செய்யலாம் என அஜித்திடம் அனுமதி கேட்க, நானே செய்து கொடுக்கிறேன் என தயங்காது ரிஸ்க் எடுத்து, நடித்து கொடுத்து அசத்தி இருக்கிறார்.
Social Plugin