தளபதி 63 படப்பிடிப்பில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் உதவி இயக்குனர் இடையிலான சல சலப்பு பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜயின் 63 திரைப்படத்தின் படப்பிடிப்புகள், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்திய படப்பிடிப்பின் போது, உதவி இயக்குனர் ஒருவர் முன் அனுமதி ஏதும் இன்றி நயன்தாராவை சந்தித்ததாக தெரிகிறது.
குறிப்பிட்ட இயக்குனர், கதை சொல்ல வந்திருப்பதாக கூறி, நயன்தாராவுக்கு இடையூறாக இருந்த நிலையில், பாதுகாவலர்களை அழைத்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் படி, கட்டளை இட்டு இருக்கிறார்.
இயக்குனரும், பாதுகாவலர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட, சிறிய கைகலப்பும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Social Plugin