Ad Code

Responsive Advertisement

ராதாரவிக்கு இப்படியொரு பதிலடியா..? மிரளவைத்த நயன்தாரா


நயன்தாராவை நடிகர் ராதாரவி தரக்குறைவாக பேசிய விஷயம் நேற்று தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இப்படியொரு கீழ்த்தரமான உரையை கண்டித்து பலதரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் கிளம்பின.

என்றாலும் தொடர்ந்து அமைதி காத்து வந்த நயன்தாராவோ, சமீபத்தில்  பெரிய அறிக்கை ஒன்றினையே வெளியிட்டு ராதாரவிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

'இந்த விவகாரத்தில் தனது கருத்தை சமூக வலைத்தள பதிவாக வெளியிட்டிருந்த நடிகை நயன்தாரா, காலத்தின் கட்டாயத்தின் பெயரில் இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன்.

 முதற்கட்டமாக இப்படியொரு சர்ச்சைக்கு காரணமான ராதாரவி அவர்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்த, திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் இப்படியொரு மனநிலையை கொண்ட ராதாரவி அவர்களும் ஒரு பெண்ணிலிருந்து தான் உருவானார் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மூத்த நடிகராக இளம் தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு, இந்த செயலினால் தவறான எடுத்துக்காட்டாய் அமைத்திருக்கிறார்.

இதை விட என்ன அதிர்ச்சிகரமானது என்றால், அவர் இப்படி பேசும் போது கைதட்டி உற்சாகப்படுத்தியவர்கள் தான். இப்படிப்பட்ட கைதட்டல்கள் கிடைக்கும் போதுதான் இவரை போன்றவர்கள் மேலும் இப்படி பேச ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.

இதுபோன்ற பெண்களுக்கெதிரான இழிவான பேச்சுகளுக்கு என் ரசிகர்களை எதிர்ப்பை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதே போல் எத்தனை தடைகள் வந்தாலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த சீதையாகவோ, பேயாகவோ, காதலியாகவோ, மனைவியாகவோ நான் நடித்து கொண்டுதான் இருப்பேன்' என பொருட்படும் படி அதிரடியாக பதிவிட்டிருக்கிறார்.