Ad Code

Responsive Advertisement

'பொள்ளாச்சி கற்பழிப்பு நியாபகம் இருக்கா?' நயன்தாராவுக்கு ரிவீட் அடித்த ரசிகர்கள்


#Nayanthara-Pollachi-Rape-Case
   
ராதாரவி நயன்தாராவை இழிவாக பேசிய விவகாரத்தில், தனக்கு இருந்த நட்சத்திர அந்தஸ்த்தை பயன்படுத்தி, வெற்றியும் பெற்றுவிட்டார். ஆனாலும், ரசிகர்கள் கேட்கும் ஒரு சில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிவருகிறது, நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி.

நயன்தாரா குறித்த விமர்சனத்திற்கு அவரை விட அதிகம் பொங்கி இருந்தவர் விக்னேஷ் சிவன்தான். நயன்தாரா அமைதி காக்க சமூகவலைத்தளங்களில் களத்தில் இறங்கி பணிபுரிந்தவரும் அவர் தான்.


இந்நிலையில், சமூக பிரச்சனைகள் வரும் போதெல்லாம் அமைதி காத்த நயன்தாரா தனக்கொன்று என்றவுடன், நெடுநீள அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருந்தார்.

Also Read | ராதாரவிக்கு இப்படியொரு பதிலடியா..?  மிரளவைத்த நயன்தாரா

இதற்கு பதிலளித்திருந்து நெட்டிசன்களில் சிலர், 'பொள்ளாச்சியில் 100 பெண்களுக்கும் மேல் கற்பழிக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழகமே கொதித்தெழுந்த போது மூச்சு கூட விடாத நீங்கள், உங்களுக்கு பிரச்சனை என்றவுடன் இப்படி பொங்குகிறீர்கள்' என பதிலளிக்க முட்டுக்கொடுத்து விக்னேஷ் சிவனையும் சேர்த்து நோஸ் கட் செய்து வருகின்றனர்.


முன்னணி நடிகையாக இருந்தாலும், பெரும்பாலானவர்களை போல தமிழகம் சார்ந்த பிரச்சனைகளை கண்டுகொள்ளாதவராகவே நயன்தாரா இருந்து வந்திருக்கிறார். காவிரி பிரச்சனைக்காக ஒட்டுமொத்த திரையுலகும், போராட்டம் நடத்திய போதும் அவர் பங்கு பெறவில்லை என்ற தகவலையும் ஒரு சிலர் பகிர்ந்து வருகின்றனர்.