Ad Code

Responsive Advertisement

ஆண்களை இழிவுபடுத்தி நயன்தாரா ஆபாச பேச்சு..? ஐரா வசனத்தினால் எழுந்த சர்ச்சை


சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ராதாரவி தன்னை கொச்சை படுத்தியதாக எழுந்த சர்ச்சைகளே அடங்காத நிலையில், ஆண்களை இழிவு படுத்துவது போன்ற காட்சியில் நடித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் நயன்தாரா.

சார்ஜுன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நயன்தாரா அசத்தி இருக்கும் திரைப்படம் ஐரா. இத்திரைப்படத்தில் இரட்டை அர்த்தத்தில் நயன்தாரா பேசிய வசனம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

அறம் போன்ற திரைப்படங்களில் நடித்து, நடிகையாக மட்டுமல்லாது சமூக அக்கறை கொண்டவராக தனது இமேஜை உயர்த்தி கொண்டிருந்தார் நயன்தாரா. இதனால் குடும்ப ரசிகர்களும் இவரது படங்களுக்கு படையெடுக்க துவங்கி இருந்தனர்.

இப்படி இருக்க, ஐரா திரைப்படத்தில், தன்னை பெண் பார்க்க வரும் இளைஞரை பார்த்து, உனக்கு 'ஆதினு பேரு வச்சத்துக்கு பதிலா...' என முடித்துக் கொண்டாலும் அவர் கூறவந்த அர்த்தத்தை புரிந்து முகம் சுளித்தனர் குடும்ப ரசிகர்கள்.  


பல பெண்கள் தன்னை ரோல்மாடலாக வைத்துக்கொண்டிருக்கும் உயரத்தில் இருந்து கொண்டு நடிகைகள், இவ்வாறு இரட்டை அர்த்தத்தில் பேசுவது இளம்பெண்களிடையே ட்ரெண்டாகவும் ஆகி இருப்பதற்கு டிக்டாக் செயலியே ஆதாரம்.

இதே போல திரைப்படத்தில் ஒரு பெண்ணை பேசி இருந்தால், நடிகைகள் தையத்தக்க என குதித்திருப்பார்கள். இப்படி இருக்க சமீபத்தில் இழிவு படுத்தி பேசப்பட்டு, 'மேடையில் ஒருவர் பிறரை புண்படுத்தி பேசினால் ரசிகர்கள் ஆதரிக்காதீர்கள்' என அட்வைஸ் எல்லாம் செய்து விட்டு, 'நீங்களே இப்படி பேசினால் எப்படி?' திரையுலகினரை கேள்வி எழுப்ப செய்துள்ளது.