வருகிற ஏப்ரல் 18ம் தேதி, நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலில் கமல் ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சி அமோக வெற்றி பெரும் என்கிறது சமீபத்திய கருத்துக்கணிப்பு.
சென்ற வருடம் தனது அரசியப்பிரவேசத்தினை பற்றி அறிவித்து உடனே கட்சியும் ஆரம்பித்து, வெகு சில சினிமா ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார் நடிகர் கமலஹாசன்.
அதனை தொடர்ந்து பல களப்பணிகளை தானே களம் இறங்கி செய்து வந்த நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டி இடுவது குறித்த தனது முடிவினையும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
Also Read | பீச்சில் மேலாடையுடன் ஆட்டம்..! அமலாபாலை விமர்சித்து தள்ளும் நெட்டிசன்கள்
சமீபத்தில் கூட அவரது கட்சிக்கு டார்ச் சின்னம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்ற அவரது முடிவினை மக்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதனை அடுத்து சுமார் 30000க்கும் மேலான ட்விட்டர் வாசிகள் கலந்து கொண்ட லோக்சபா தேர்தல் குறித்த சமூக வலைதள கருத்துக்கணிப்பில், கிட்டத்தட்ட 40% வாக்குகளை பெற்று அதிமுக, திமுக போன்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளியுள்ளது 'மக்கள் நீதி மய்யம்' கட்சி.
Since all the Alliances have been finalized; Who will you vote for this Loksabha Election to be held on April 18th ?— Prashanth Rangaswamy (@itisprashanth) March 10, 2019
பொள்ளாச்சி கற்பழிப்பு விவகாரத்தில், திமுக-அதிமுக-பாஜக என முன்னணி கட்சிகளின் பெயர் நாறிப்போய் கிடப்பதே இந்த வித விளைவை கருத்துக்கணிப்பில் ஏற்படுத்தி இருப்பதாகவும் அரசியல் பிரமுகர்களை பேச வைத்துள்ளது.
Social Plugin