Ad Code

Responsive Advertisement

திருமணமான பிரபலத்துடன் காதல்..? சர்ச்சையில் சிக்கிய மேகா ஆகாஷ்


ரஜினியின் பேட்ட, சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய இரு திரைப்படங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ள நடிகை மேகா ஆகாஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் நீண்ட எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வர இருக்கிறது.

இப்படி இருக்க, சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. குறிப்பிட்ட நேர்காணல் ஒன்றில், பிரபலங்கள் குறித்தும் அவர்களை சந்தித்தால் என்ன பேசுவீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், விஜயை சந்தித்தால் நடனமாட சொல்லிக்கொடுங்கள் என்று கேட்பேன். அஜித்தை சந்தித்தால் எப்படி இவ்வளவு ஹேண்ட்ஸம் ஆக இருக்கின்றீர்கள் என கேட்பேன். அதுவே கிரிக்கெட் வீரர் தோனியாக இருந்தால், உடனே அவரை காதலிப்பதாக கூறி விடுவேன்' என்றிருந்தார்.

நடிகையின் இந்த கருத்திற்கு பதிலளித்து இருந்த ரசிகர்கள், 'அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதே. குடும்பத்தில் குட்டையை கிளப்பி விடாதீர்கள்' என பதிலளித்து வருகின்றனர்.