Ad Code

Responsive Advertisement

திண்டுக்கல்லை கலக்கும் 'மன்சூர் அலிகான்'... அனல் பறக்கும் அரசியல் பிரச்சாரம்...!


நாம் தமிழர் கட்சியின் சார்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற லோக் சபா தேர்தலில் போட்டியிட இருக்கிறார் மன்சூர் அலிகான்.

தனது காரசாரமான பேச்சால், அவ்வப்போது விவகாரங்களில் சிக்கி கொள்ளும் நடிகர் மன்சூர் அலிகான். இவர் ஆளும் கட்சிக்கு எதிராக பலமுறை கருத்துக்களை தெரிவித்து சிறை சென்ற சம்பவங்களும் நிகழ்ந்தேறியிருந்தது.

இதனை தொடர்ந்து, சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில், தற்பொழுது அக்கட்சிக்காக வருகிற லோக்சபா தேர்தலுக்காக திண்டுக்கல் மாவட்டத்திலும் போட்டியிட இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அம்மாவட்ட மக்களை சந்தித்து பேசி வரும் அவர், தனது வழக்கமான அனல் பறக்கும் பேச்சால் திண்டுக்கல்லை கலக்கி வருகிறார்.


நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட்டுக்கு சென்று விவசாயிகளை சந்திப்பது. அவர்களோடு விற்பனை செய்வது, பச்சை காய்கறிகளை உண்பது என வித்யாசமான முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.