நயன்தாராவை தரக்குறைவாக பேசிய சர்ச்சையில், ஒட்டுமொத்த தமிழகமே ராதாரவியை விமர்சனம் செய்து வருகிறது. படவாய்ப்புகள் பறிபோனது, அரசியல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
இவ்வளவு பெரிய பூகம்பத்திற்கிடையேயும், சீரும் சிறப்புமாக நடந்து முடிந்திருக்கிறது சர்ச்சை நாயகன் ராதாரவி குடும்ப திருமணம்.
M.R. ராதா அவர்களின் கொள்ளு பேரனான நரேஷ் கார்த்திக்கும் , பார்த்திபன் - சீதா தம்பதியின் மூத்த மகளான அபிநயாவுக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
திரையுலக பிரபலங்கள் ராதாரவி உள்ளிட்ட உற்றார் உறவினர்கள் கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்வில், நயன்தாரா பஞ்சாயத்தையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு மணமக்களை அனைவரும் வாழ்த்தி சென்றனர்.
Social Plugin