Ad Code

Responsive Advertisement

இது என்ன KGF நாயகனுக்கு வந்த சோதனை..? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்


'பிரசாந்த் நீல்' இயக்கத்தில் உருவான கன்னட மொழி திரைப்படம் 'KGF' தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

அதில் நடித்த நாயகன் 'யாஷ்' ஒட்டுமொத்த இந்திய அளவில் பிரபலமானார். மேலும் இத்திரைப்படத்தின் வசனங்களும் பெரிய அளவில் ரீச் ஆனது.

KGF திரைப்பட வசனங்களை வைத்து மீம் கிரியேட்டர்ஸும் ஒரு கலக்கு கலக்கி வந்தனர். இந்நிலையில் வீட்டு வாடகை கொடுக்காத பிரச்சனையில் சிக்கி, நீதிமன்றத்தின் நோட்டிஸை பெற்றிருக்கும் நடிகர் யாஷை, அவரது வசங்களினாலேயே கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

குசும்புக்கார நெட்டிசன்களின் கிண்டல் பதிவுகளை பார்த்து சிரிப்பதா, அல்லது இப்படியொரு பிரச்சனையில் சிக்கி இருக்கும் யாஷ் குறித்து வருத்தப்படுவதா என தெரியாத அளவிற்கு குழப்பி விடும் ரசிகர்களின் அந்த கருத்துக்கள் இதோ.