Ad Code

Responsive Advertisement

'விஸ்வாசம்' நெருங்க கூட முடியாத விஜயின் சாதனை... மாஸ் காட்டும் ரசிகர்கள்


தமிழ் சினிமா வரலாற்றில், எப்படி பட்ட பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆனாலும் பிரமாண்ட லாபத்தை ஈட்டலாம், என நிரூபித்து காட்டிய திரைப்படங்கள் பேட்ட மற்றும் விஸ்வாசம்.

அதிலும் குறிப்பாக விஸ்வாசம் திரைப்படம், உலக அளவில் பிரபலமான சூப்பர் ஸ்டாரின் பேட்டையை தாண்டி, பல வசூல் சாதனைகளை தமிழகத்தில் படைத்தது.

முன்னதாக இவற்றை எவராலும் தொட கூட முடியாது என்றிருந்த நடிகர் விஜயின் மாபெரும் சாதனைகளையும் விஸ்வாசம் முறியடித்து காட்டியது.

என்றாலும் இந்த சாதனைகள் தமிழகத்தில் மட்டும் தான், தமிழகத்திற்கு வெளியே ரஜினியின் பேட்டை ஆகட்டும், விஜயின் பிற திரைப்பட சாதனைகள் ஆகட்டும், எவற்றையும் விஸ்வாசத்தால் நெருங்க கூட முடியவில்லை.   

குறிப்பாக கேரள மாநில பாக்ஸ் ஆபிஸில், ஆம் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் கேரளாவில் அதிக வசூல் குவித்த டாப் 10 திரைப்பட லிஸ்டில் விஸ்வாசம் இடம் பெறவே இல்லை.

இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், லிஸ்டில் 6 இடங்களை நடிகர் விஜயின் படங்களே கைப்பற்றி இருக்கிறது. அடுத்ததாக நடிகர் ரஜினியின் படங்கள் மூன்று இடங்களையும், விக்ரமின் திரைப்படம் ஒரு இடத்தையும் பிடித்திருக்கிறது.