Ad Code

Responsive Advertisement

கேலி, கிண்டல்களுக்கிடையேயும் சாதித்த கீர்த்தி சுரேஷ்... குவியும் பாராட்டுக்கள்


தமிழ் சினிமாவில் மீம் கிரியேட்டர்ஸ்களினால் அதிக அளவில் கிண்டல் செய்யப்படும் நடிகைகளில் கீர்த்தி சுரேசும் ஒருவர்.

தவறான நேரங்களில் கிளிக் செய்யப்படும் புகைப்படங்களை வைத்து சமூக வலைத்தளங்களில் வெளிவரும் மீம்ஸ்கள் தன்னை கஷ்டப்படுத்தினாலும், அவற்றிற்கு வார்த்தைகளால் அல்லாது தனது வெற்றியால் பதிலடி கொடுத்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். 

நடிகர்களை விரட்டி விரட்டி காதலிக்கும் ஒன்றுமில்லாத கதாப்பாத்திரங்கள் மட்டுமல்லாது, எத்தகைய கடினமான கதாப்பாத்திரத்தையம் தன்னால் நடித்து அசத்த முடியும் என்பதனை 'நடிகையர் திலகம்' படத்தின் மூலம் நிரூபித்த அவர், அடுத்த கட்டமாக பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில், பாலிவுட் படங்களில் நடிப்பதென்பது பல முன்னனி .நாயகிகளுக்கே எட்டா கனியாக இருந்து வரும் நிலையில், போனி கபூரின் தயாரிப்பில், 'பாதை ஹோ' எனும் வெற்றிப்படம் கொடுத்த அமித் ஷர்மா இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் நிலையில், திரையுலகினரின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.