காவிரி பிரச்சனையை காரணம் காட்டி, தமிழகத்தில் IPL போட்டிகளை நடக்க விடாமல் ஒரு சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி விளம்பரம் தேடிக்கொண்டதை மறந்திருக்க முடியாது.
இதனால் ஏற்பட்ட சர்ச்சைகளால், சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் IPL போட்டிகளின் 12வது சீசன் தொடங்க உள்ள நிலையில், தனது நாரதர் வேலையை காட்டி இருக்கிறார் கஸ்தூரி.
சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வம்பில் சிக்கி கொள்பவரான இவர், சமீபத்தில் வெளியிட்டுள்ள IPL குறித்த பதிவில்,
'இன்று #IPL12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை, தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ?' என தெரிவித்து சிவனே என்று தேர்தல் வேளைகளில் மும்முரமாக இருக்கும் அரசியல் கட்சிகளை வம்புக்கு இழுத்திருக்கிறார்.
Social Plugin