பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வருபவர்களில் ஒருவர் நடிகை 'கங்கனா'. இவர் ஜெயம் ரவியின் தாம் தூம் திரைப்படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.
என்னதான் புகழ்பெற்ற நடிகையாக இருந்தாலும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் இவர், தான் ஆபாச படத்தில் நடித்த அனுபவத்தினை பகிர்ந்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த அவர், அது நான் திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு தேடி கொண்டிருந்த சமயம். அப்பொழுது 'ஐ லவ் யு பாஸ்' எனும் திரைப்படத்திற்கான ஆடிசன் நடந்தது.
'வாய்ப்பு கிடைத்தால் சரி' என நானும் கலந்து கொண்டேன், அப்பொழுது உடையேதும் அணியாமல் கயிறு ஒன்றினை மட்டும் கட்டிக்கொண்டு நடிக்க சொன்னார்கள்.
நானும் நடித்து தேர்வானேன். அந்த திரைப்படத்தில் எனக்கு 'தன் முதலாளியை காதலிக்கும் படுக்கவர்ச்சி பெண் கதாபாத்திரம். அதாவது அது ஆபாச படங்களுக்கு ஒரு படி கீழான, சாஃப்ட் போர்ன் திரைப்படம்.
என்றாலும் நடிக்க விருப்பமில்லாமல், ஓடி ஒளிந்துகொண்டேன். என் தொடர்பு எண் மற்றும் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டையும் மாற்றினேன்' என தெரிவித்து ஆரம்பத்தில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து விளக்கி இருந்தார்.
Social Plugin