Ad Code

Responsive Advertisement

நயன்தாராவை திட்டியது ஏன்..? உண்மையை சொன்ன ராதாரவி.. பிரபலம் வெளியிட்ட தகவல்


கொலையுதிர்காலம் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி இருந்தார் நடிகர் ராதாரவி. இதனால் இவருக்கு ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்த நிலையில், தான் அவ்வாறு பேசியது ஏன் என மனம் திறந்திருக்கிறார் ராதாரவி.

இது குறித்து, நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார் பிரபல நடன இயக்குனரான கலா.  குறிப்பிட்ட நேர்காணலில் நடிகர் ராதாரவி மதிப்பிற்குரிய ஒரு மனிதர். அவர் அவ்வாறு பேசியதும் தவறுதான். நயன்தாராவும் மிகவும் நல்ல குணம் படைத்தவர்.


'அப்படிபட்ட ஒருவ ர் குறித்து ஏன் அவ்வாறு பேசினீர்கள்?' என ராதாரவியிடம் கேட்டேன், அதற்கு அவர், நான் அவரை திட்ட வேண்டும் என்றெல்லாம் பேசவில்லை. ஏதோ விளையாட்டாக பேசியது வினையாக முடிந்த விட்டது' எனக்கூறி வருந்தியதாக அவர் தெரிவித்தார்.

இந்த கருத்து ஒருபுறம் இருந்தாலும், கொலையுதிர்காலம் திரைப்பட தயாரிப்பாளருடன் நயன்தாராவுக்கு ஏற்பட்ட மோதலின் காரணமாக, படபிரமோஷன்களை அவர் புறக்கணித்ததே இந்த விமர்சனத்துக்கு காரணம் எனவும் கிசுகிசுக்கிறது சினிமா வட்டாரங்கள்.