சினிமாவில் மட்டும் நாயகன், நாயகி என்பதை தாண்டி, நிஜ வாழ்விலும் நாயகன் நாயகியான பிரபலங்கள் ஏராளம். அவர்களின் வரிசையில் தற்பொழுது நடிகை காஜல் அகர்வாலும் இணைந்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.
முன்பை விட தமிழ், தெலுங்கு திரையுலகில் தனக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டாலும், கதைக்கான முக்கியத்துவம் இருக்கும் பட்சத்தில் இளம் நாயகர்களுக்கும் ஜோடி போட தயாராகி இருக்கிறார் நடிகை காஜல்.
இந்நிலையில்,சமீபத்தில் இவர் செய்து வரும் சமூக சேவைகள் குறித்தும் செய்திகள் வெளிவர துவங்கியுள்ளது. அதன் படி, ஆந்திராவில் உள்ள அரக்கு எனும் ஆதிவாசிகளின் கிராமத்திற்கு சமீபத்தில் சென்ற காஜல் அகர்வால், அங்குள்ள குழந்தைகள் கற்பதற்கு பள்ளிக்கூடம் இல்லாததை அறிந்து, தன் சொந்த செலவிலேயே அப்பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றினை கட்டி கொடுத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
Social Plugin