Ad Code

Responsive Advertisement

உறுதியாக வருகிறது 'இந்தியன்-2'... ரசிகர்களை குஷிப்படுத்திய தகவல்


1996ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

என்றாலும் படப்பிடிப்பு துவங்குவதால் ஏற்பட்ட தாமதம், அந்த தாமதத்தினால் நயன்தாரா விலகியது, பட்ஜெட் பஞ்சாயத்து, படப்பிடிப்பு செட் பஞ்சாயத்து, கமல் மேக்கப் பஞ்சாயத்து என தொடர்ந்து வந்த பல்வேறு தடங்கல்கள் காரணமாக, அந்த திரைப்படம் கைவிடப்படும் அபாயகரமான கட்டத்தையும் சமீபத்தில் எட்டி இருந்தது.

மேலும் லோக்சபா தேர்தல் வரும்வரை கமழும் படப்பிடிப்பு பக்கம் தலைவைத்து படுக்கமாட்டார் என்கிறதையும் காரணம் காட்டி இந்தியன்-2 டிராப் செய்ய்யப்படுவது உறுதி என வதந்திகள் பரவ துவங்கி இருந்தது.

இப்படியொரு சூழ்நிலையில், அத்திரைப்படம் படமாக்கப்படும் என்பதை உறுதி படுத்தும் விதத்தில் வெளியாகி இருக்கிறது தகவல் ஒன்று.  தன் படங்களின் பட்ஜெட் இதுதான் என ஒருபோதும் வாக்களிக்காதவரான இயக்குனர் சங்கர், 'இந்தியன்-2'வினை  கைவிட்டுவிடக்கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக, தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருப்பதாக தெரிகிறது.   

அதன்படி, தனது வழக்கத்தை மீறி குறிப்பிட்ட தொகைக்குள் இப்படத்தினை முடித்து தருவதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு உறுதி அளித்து, ரிஸ்க் எடுத்திருக்கிறார் சங்கர். இதனால் இந்தியன்-2 திரைப்படம் கைவிடப்படும் வாய்ப்பே இனி இல்லை என அடித்து கூறி வருகின்றன சினிமாவட்டாரங்கள் .