சின்னத்திரை, வெள்ளி திரை பிரபலங்களை நேர்காணல் எடுப்பவர்கள், பரபரப்புக்காக அஜித், விஜய் குறித்த கேள்விகளை கேட்பது தற்பொழுது வாடிக்கையாகி விட்டது.
அதற்கு அந்த பிரபலங்கள் கூறும் பதில்களே ஒரு சில வாரங்களுக்கு அவர்கள், 'சமூக வலைத்தளங்களில் தலை கட்டலாமா, இல்லை கூடாதா' என்பதனை முடிவு செய்யும்.
அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் திரண்டு கிடக்கும், அஜித் விஜய் ரசிகர்கள் தங்களுக்கெதிரான விமர்சகர்களை தாளித்து எடுக்க காத்திருக்கின்றனர்.
இவர்களிடம் சிக்கி எக்கச்சக்க பிரபலங்கள் சின்னா பின்னாமாகி இருக்கும் நிலையில், தற்பொழுது சர்ச்சையில் சிக்க இருந்து நூலிழையில் தப்பித்து இருக்கிறார் பிரபல செய்தி தொலைக்காட்சியின் தொகுப்பாளினி பனிமலர்.
நேர்காணல் ஒன்றில், அஜித் பிடிக்குமா விஜய் பிடிக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பனிமலர், 'சிறு வயதில் அஜித் எனக்கு பிடிக்காது. அஜித் ரசிகையாக தோழியையும் கலாய்த்து தள்ளிவிடுவோம்' என்றார்.
இதன் பின்னால் இருக்கும் வில்லங்கத்தையும் புரிந்து பின்பு சுதாரித்துக் கொண்ட அவர், 'ஆனால் வளர்ந்ததும், அவர் பட்ட கஷ்டங்கள், பின்னணி இல்லாமல் சினிமாவில் ஜெயித்தது போன்றவை அஜித் பற்றிய எண்ணத்தை மாற்றிவிட்டது' என அந்தர் பல்டி அடித்திருந்தார்.
Social Plugin