Ad Code

Responsive Advertisement

அவருக்கு ஜோடியாகுற அளவுக்கு ஹன்சிகா மட்டமா..? கொதித்தெழுந்த ஹன்சிகாவின் தாயார்


நடிகை ஹன்சிகா குறித்து வெளியான அதிகாரபூர்வமற்ற செய்தி கண்டு கொதித்தெழுந்து இருக்கிறார் அவரது தயார் மோனா.

தமிழ், தெலுங்கு திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு கொடி கட்டிபறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி. விஜய், தனுஷ், சிம்பு, சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கே டஃப் கொடுத்த இவர் இன்று கேட்பாரற்று கிடக்கிறார்.

சம்பளத்தை வெகுவாக குறைத்து, வளர்ந்து வரும் நாயகர்களுடன் நடித்து வரும் இவர், மரகதநாணயம், ஈரம் போன்ற திரைப்படங்களில் நடித்த ஆதியுடன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியிட்டது பிரபல இணையதளம்.

இதனை கண்டு கொதித்தெழுந்த ஹன்சிகாவின் தாயார், குறிப்பிட்ட இணையதளத்தை தொடர்பு கொண்டு, 'ஆதியுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கா என் மகள் வந்துவிட்டால்? ஹன்சிகா நடிக்கும் படத்தில் அவருக்கு முக்கிய கதாப்பாத்திரம் அவ்வளவுதான்' என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம்.