Ad Code

Responsive Advertisement

'எவனோ கற்பழிச்சதுக்கு ஏன் அந்த கட்சியை இழுக்குறீங்க.?' பொள்ளாச்சி விவகாரத்தில் காயத்ரி சர்ச்சை பேச்சு


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து வருபவர் என்றால், அது நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரிதான்.

எந்த ஒரு பிரச்சனையாய் இருந்தாலும் பாஜக கட்சிக்கு களங்கமளிக்காதபடி கூறப்படும் இவரது பதில்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் எதிர்ப்பு எழுவது ஒன்றும் புதிதல்ல.  

இப்படி இருக்க, அதிமுக கட்சியினரின் தலையீடு இவ்விவகாரத்தில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதன் கூட்டணி கட்சியான பாஜக விற்கு களங்கம் வந்துவிடாதபடி பதிவுகளை வெளியிட்டு வருகிறார் காயத்ரி.

'கற்பழிப்பு என்பது தனிப்பட்ட மனிதன் சார்ந்தது, பால் சார்ந்தது இதனை குறிப்பிட்ட கட்சியினர் செய்ததாக, அரசியலுடன் தொடர்பு படுத்த வேண்டாம். இது தனிப்பட்ட நபர்கள் செய்த குற்றம், அதனால் அந்த தனிப்பட்ட நபர்களுக்கு எப்பேர்ப்பட்ட தண்டனையும் வழங்கலாம்.' என அவர் வெளியிட்டுள்ள பதிவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


Also read