Ad Code

Responsive Advertisement

சினிமாவிலிருந்து காணாமல் போன 'கானா பாலா'...! நெகிழ வைக்கும் காரணம்


தனது வித்யாசமான குரலில், கேட்டவுடன் கவரும் கானா பாடல்களை பாடி பிரபலமானவர் 'கானா பாலா'. 2007ம் ஆண்டு முதல் 2018 வரை நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி வெற்றிகரமான கானா பாடகராக வலம்வந்த இவரது குரலை சமீப காலங்களாக கேட்டிருக்க மாட்டீர்கள்.

கானா பாடல்களுக்கான மவுசும் சமீபத்திய சினிமாவில் குறைந்து விட்ட சூழ்நிலையில், பெரும்பாலான ரசிங்கர்களும் அவரை மறந்து போய்விட்டனர்.

'நடுக்கடலுள்ள கப்பல இறங்கி தள்ள முடியுமா' எனும் பாடலில் மக்களிடம் பிரபலமாகி, இன்று ஆள் அட்ரஸே தெரியாமல் இருக்கும் அளவிற்கு திடீரென என்ன நடந்தது என கேட்பவர்களுக்கு கிடைப்பதோ நெகிழ வைக்கும் ஒரு பதில். 

சினிமா பாடகராவதற்கு முன்பு, வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த கானா பாலா, தனது பாணியில் சொந்த வரிகளில் பாடல்களை எழுதுவதைவும் பாடுவதையும் பொழுதுபோக்காகவும், வேலையாகவும் செய்து வந்தவர்.

இவரது பாடல்கள் திரைத்துறையினரையும், ரசிகர்களையும் கவரவே தொடர்ந்து திரைப்படங்களில் பாடி வந்தார். ஆனால் காலப்போக்கில் அவரது பாணியை மாற்றி புரியாத வார்த்தைகளில் பாடல்களை பாட, திரையுலகினர் கேட்டுக்கொண்டது பிடிக்காமல் போகவும்,

தான் இல்லை என்றால் தனக்கு கிடைக்கும் 100 பாடல் வாய்ப்புகள், வளர்ந்து வருபவர்களுக்கு செல்லும் என்ற எண்ணத்திலும் திரையுலகை விட்டு விலகுவதாக கடந்த 2017ம் ஆண்டே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் கானா பாலா.

சொன்னது போலவே, தான் ஒப்பந்தமாகி இருந்த பட பாடல்களை முடித்து கொடுத்து விட்டு, 2017ம் ஆண்டின் இறுதியில் திரையுலகில் பாடுவதை நிறுத்திக்கொண்டார்.