கிரிக்கெட்டில் தனது அசாத்திய தலைமை, விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமையினால் இந்தியாவில் மாபெரும் பெயரையும் புகழையும் சம்பாதித்தவர் மகேந்திர சிங் தோணி.
கிரிக்கெட் மட்டுமல்லாது பிற திறமைகளையும் கொண்ட இவரது வாரிசான ஷிவாவும், அப்பாவுக்கு தப்பாது திறமையான ஒருவராகவே உருவாகி வருகிறார்.
4 வயதே ஆன ஷிவா இப்பொழுதே, பாடல்கள் பாடுவது, தந்தைக்கு நடனம் சொல்லி கொடுப்பது, முன்னணி நடிகைகளை போல ரசிகர்களை கியூட்டாக சமாளிப்பது என தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் லைக்குகளை அள்ளி குவிக்கிறார்.
இவர் குறித்து வெளியாகும் அனைத்து வீடியோக்களும் வைரலாகிவிடும் நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
குறிப்பிட்ட வீடியோவில் தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகளில், தோனி செல்ல மகளிடம் கேள்வி எழுப்புகிறார் அவை அனைத்திற்கும் குறிப்பிட்ட மொழிகளில் பதிலளித்து பார்ப்பவர்களை வியக்க வைத்திருக்கிறார் ஷிவா.
Mahi : எப்படிங்க இருக்கீங்க...— Trollywood II 🌀 (@TrollywoodV2) March 24, 2019
Ziva : நல்லா இருக்கேன்.. 😍 pic.twitter.com/dtnE0d6EWp
Social Plugin