Ad Code

Responsive Advertisement

ஊனமுற்ற ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய தோனி... விமான நிலையத்தில் சுவாரஸ்யம்


முன்னாள் இந்திய அணியின் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரே தலைவருமான மஹேந்திர சிங் தோனிக்கு தமிழகத்தில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

அப்படிப்பட்ட ரசிகர்களில் ஒருவர் தான் 16 வயதே ஆன டேவிட். மன நலம் குன்றி, நடக்க, பேச முடியாதவரான இவர் தோனி விளையாடும் அனைத்து போட்டிகளையும் தவறாது பார்த்துவிடுவாராம்.

அவர் ஆட்டம் இழந்துவிட்டால், அப்போதைய சச்சின் ரசிகர்களை போல டிவியை ஆஃப் செய்து விடும் அளவிற்கு தீவிர ரசிகரான இவருக்கு, தோனியை நேரில் சந்திக்கவேண்டும் என்பது மிகப் பெரும் கனவாக இருந்துள்ளது.

மகனின் இந்த கனவை நிறைவேற்றும் பொருட்டு தந்தை ஆனந்தராஜ், சென்னை விமான நிலைய ஊழியர்களின் அனுமதியோடு, வீரர்கள் செல்லும் பகுதியிலேயே காத்திருந்திருக்கிறார்.

இடையூறு இல்லாமல் தூரத்தில் பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என நினைத்து காத்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. தனது ஊனமுற்ற ரசிகரை பற்றி கேள்விப்பட்ட தோனி தானாக முன்வந்து, டேவிட்டை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவரது கனவை  நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.