Ad Code

Responsive Advertisement

'அஜித்' நடிகரே அல்ல..! மூத்த நடிகர் அதிரடி கருத்து


நடிகர் அஜித்தினை பற்றி புகழாத சக நடிகர்களே இல்லை என கூறலாம். அவரை வெறுத்தவர்கள் கூட அவருடன் பணிபுரிந்தால், தன்னிலை மறந்து அஜித்தை புகழ துவங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு பணிவு, தன்னடக்கம் போன்ற குணங்களால் ஆச்சர்யப்படுத்தி விடுவார்.

இந்நிலையில் பிரபல நடிகர் 'டெல்லி கணேஷ்' அவர்களும் அஜித்துடன் பணிபுரிந்து குறித்த தனது அனுபவத்தினை பகிர்ந்திருக்கிறார். அவர் பற்றி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த டெல்லி கணேஷ்,

'அஜித்துடன் 'நேர்கொண்ட பார்வை' முன்னதாகவே ஓரிரு படங்களில் நடித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அவரிடம் அந்த அளவிற்கு நெருக்கம் இல்லை. ஆனால் இத்திரைப்படத்தில் அவருடன் பழகும் அனுபவம் கிடைத்தது.

ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் உட்பட ஒவ்வொரு பணியாளரும் மிகவும் மரியாதையுடன் நடத்துவார். ஆடம்பர கேரவன் அளிக்கப்பட்டிருந்தும், வெளியே சேரில் அமர்ந்து படக்குழுவினரிடம் மனம்விட்டு பேசுவார். என்னை பொறுத்தவரை அவர் நடிகர் கிடையாது, அதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர்.

உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என கூறுவார்கள், அஜித் தன்னை நன்கு அறிந்திருக்கிறார். எவ்வளவு உயரம் போனாலும் எளிமையும் அடக்கமும் தான் நம்மை பற்றி பேசும் என்பதனை புரிந்து வைத்திருக்கும் ஒரு மாமனிதர்' என வியந்து பாராட்டி இருக்கிறார்.