பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளியான திவ்ய தர்சினி தற்பொழுது திரைப்படங்களிலும் பரவலாக நடித்து வருகிறார். பவர் பாண்டி, சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்களில் ஏற்கனவே தலைகாட்டி விட்ட இவர், தற்பொழுது நாயகியாக நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வலம்வருகிறது.
இன்று இவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவை தொடர்ந்தே இந்த பேச்சு கோலிவுட் திரையுலகில் பரவலாக அடிபட துவங்கியுள்ளது.
குறிப்பிட்ட பதிவில், 'என் இனிய நாயகனுடனான ரொமான்டிக் திரைப்படத்தின் முதல் பகுதியை நடித்து முடித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பினை வழங்கியதற்கு படக்குழுவுக்கு நன்றி' என தெரிவித்து, நடிகர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார்.
குறிப்பிட்ட நடிகர் 23 வயதே நிரம்பிய, பிரபல தெலுங்கு பட இயக்குனரான புரிஜெகன் அவர்களது மகன் ஆகாஷ் ஆவார். இவர் ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், 36வயதான டிடியுடன் ஜோடி போடுகிறாரரா? என ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது இந்த பதிவு.
Social Plugin