பொள்ளாச்சி கற்பழிப்பு விவகாரத்தில் தங்களது கண்டனங்களை தெரிவித்த பிரபலங்களில் சின்மயியும் ஒருவர். அதற்கு முன்னதாகவே #MeToo இயக்கம் வழியாக திரைத்துறை பிரபலங்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தீவிரமாக பேசி வந்தார் இவர்.
இதன் காரணமாக ஒருபுறம் இவருக்கு பாராட்டுக்கள் குவித்தாலும், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரத்திலும் தனது கருத்தினால் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறார் சின்மயி.
Also Read | எனக்கு ஏகப்பட்ட காதலர்கள்...! உண்மையை சொன்ன ராய் லக்ஸ்மி
250க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்ட இந்த விவகாரத்திற்கு பின், பொள்ளாச்சி பகுதியில் உள்ள பெண்களை திருமணம் செய்ய மக்கள் தயங்குவதாக ஒரு தனியார் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.
த்மிழ் சமுதாயம். pic.twitter.com/QdTLIe6kVT— Chinmayi Sripaada (@Chinmayi) March 13, 2019
இதனை 'தமிழ் சமுதாயம்' என பதிவிட்டு தனது அதிருப்தி தெரிவித்திருந்த சின்மயி, தமிழக மக்களின் பிற்போக்கு சிந்தனை பற்றி சொல்லாமல் சொல்லி இருந்தார்.
Social Plugin