Ad Code

Responsive Advertisement

சர்கார் '49-P' விடுங்க...! சின்மயி சொல்லும் '49-O' பத்தி தெரியமா..?


விஜய் நடித்து வெளியான, சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியின் மூலம், அரசியலமைப்பு சட்டம் 49-P பற்றி ஒட்டுமொத்த இந்தியாவும் அறிந்துகொண்டது.

தங்கள் ஓட்டு கள்ளஓட்டு போடப்பட்டு விட்டால் முறையான ஆவணங்கள் சமர்ப்பித்து, மீண்டும் வாக்குரிமை பெறுவது குறித்த குறிப்பிட்ட சட்டம் குறித்து ஒட்டுமொத்த தமிழக மக்களும் அறிவோம்.

தற்பொழுது அதே போல, செக்சன் 49-O குறித்து பேசி பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் பாடகி சின்மயி. அதாவது 'அரசியல் சட்டம் 1961'ன் படி, தகுதியான வாக்காளர் வாக்களிக்க விரும்பவில்லை என்றால், அதனையும் கணக்கில் வைத்து கொள்வதே குறிப்பிட்ட சட்டம்.

ஆனால் இம்முறையில், வாக்காளர் 49-O தேர்வு செய்வது குறித்து   தலைமை அதிகாரியிடம் அறிவிக்கவேண்டி இருப்பதனால், வாக்காளரின் தகவல்கள் வெளியாகும் வாய்ப்பு இருப்பதனால், அதற்கு பதிலாக கடந்த 2013ம் ஆண்டு 'NOTA' முறையை அமலுக்கு வந்தது.

இது குறித்து அண்மையில் பதிவிட்டிருக்கும் சின்மயி, இன்னமும் இச்சட்டம் நடைமுறையில் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.