பாலிவுட்டின் முன்னணி நாயகியான தீபிகாவின் புதிய படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது.
கவர்ச்சி காட்டி மட்டும் நடித்து வந்த நாயகிகள் தற்பொழுது, மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கி இருக்கின்றனர். அப்படி பாலிவு திரையுலகில் அசத்தலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன்.
இவர் பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர், மேக்னா குல்ஸாரின் 'ச்சபாக்' எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். குறிப்பிட்ட திரைப்படத்தில் மேக்கப் அணிந்து அழகு பதுமையாக இல்லாமல், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக அகோர தோற்றத்துடன் தோன்ற இருக்கிறார்.
சிறிய முகப்பரு வந்தாலே, வெளியே தலைகாட்டாத இக்கால பெண்களின் மத்தில், ஆசீட் வீச்சில் வெந்த முகத்தோடும் மனவலிமையோடு, தன்னை போல பாதிக்கப்பட்ட பிறரது வாழ்விலும் ஒளியேற்றி வரும் 'லக்ஸ்மி அகர்வாலின்' உண்மை கதையை மையப்படுத்தி உருவாக இருக்கும் இத்திரைப்படத்தின் அதிர வைக்கும் பர்ஸ்ட் லுக் இதோ.
A character that will stay with me forever...#Malti— Deepika Padukone (@deepikapadukone) March 25, 2019
Shoot begins today!#Chhapaak
Releasing-10th January, 2020.@meghnagulzar @foxstarhindi @masseysahib pic.twitter.com/EdmbpjzSJo
Social Plugin