தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகையாக திகழ்ந்து சென்ற வருடம் மர்மமான முறையில் மறைந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார் நடிகை ஸ்ரீ தேவி.
அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கணவர் போனிகபூரே, இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்துவிட்டு நாடகமாடியாதாகவும் சர்ச்சைகள் எழுந்தது.
என்றாலும், உடற்கூறு ஆய்வில் ஸ்ரீ தேவி கொலை செய்யப்படவில்லை என நிரூபிக்கப்பட்ட நிலையில், சர்ச்சைகள் நீங்கி பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், போனிகபூரின் சமீபத்திய நடவடிக்கைகள் ஸ்ரீதேவியின் மரண சர்ச்சைகளை மீண்டும் பேசப்பட செய்துள்ளது. மனைவியின் மரணத்தின் போது மிகப்பெரும் கடன் சுமையில் போனிகபூர் சிக்கி தவித்து வந்தார்.
ஆனால், அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படம் உள்ளிட்ட 7 திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க ஆயத்தமாகி இருப்பதாக திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. போனிகபூரின் இந்த திடீர் பண புழக்கம், ஸ்ரீ தேவியின் இன்சூரன்ஸ் சர்ச்சைகளை மீண்டும் கிளப்பியுள்ளது.
Social Plugin