நயன்தாரா குறித்து ராதாரவி கொச்சையாக பேசிய நிகழ்வு, தமிழகத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. பல தரப்பு மக்களிடையே எழுந்த கண்டனங்களால், திமுக கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ராதாரவி.
இந்நிலையில், பாஜக கட்சியின் தமிழக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜனும் ராதாரவி குறித்து கருத்து தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
சமீபத்தில் இதுபற்றி அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், 'நயன்தாராவை பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது. அதற்காக ராதாரவி நீக்கம் என ஸ்டாலின் அறிவிப்பு ஒரு தேர்தல்நேரத்து நாடகம். ஏனென்றால் ராதாரவி என்னைப்பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் பலஆண்டுகளாக திமுகமேடைகளில் இருந்து வந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பெண்மையைபழிப்பது திமுகவின் வாடிக்கை' என தெரிவித்து சினிமா சண்டையை கட்சி சண்டையாக மாற்றி இருக்கிறார்.
Social Plugin