சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக மட்டுமல்லாது, சிறந்த பொழுது போக்காளராகவும் ரசிகர்களை கவர்ந்தவர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சார்ந்த பிராவோ.
IPL போட்டிகளில் சென்னை அணி பறக்க விடும் சிக்ஸர்களை பார்க்க ஒரு கூட்டம் இருப்பதை போல, பிராவோவின் நடனத்தை பார்க்கவும் ஒரு கூட்டம் உள்ளது.
அவர்களுக்கு ஒருபோதும் விருந்தளிக்க தவறாதவறான பிராவோ, இந்த சீசனிலும், சியர் லீடர் பெண்களுடன் நடனமாடி கலக்கி வருகிறார். இப்படி போட்டியின் போது மட்டுமல்லாது, போட்டி முடிந்த பின்னரும் இவர் தனது நடன திறமைகளை காட்ட தவறியதில்லை.
அப்படி நைட் கிளப் ஒன்றில், நடிகர் சிம்புவின் பாடலுக்கு நடனமாடியம் ரசிகர்களை குதூகலிக்க செய்துள்ளார் பிராவோ. ஒஸ்தி படத்தில் இடம்பெற்றிருந்த கலாசலா பாடலுக்கு தனது பாணியில் அவர் ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2019
Social Plugin