திரைப்படங்களை தாண்டி அதன் படப்பிடிப்புகளில் நடைபெறும் பல சம்பவங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் சாட்டை 2 திரைப்பட படப்பிடிப்பிலும் நிகழ்ந்தேறியுள்ளது ஒரு சம்பவம்.
அன்பழகன் இயக்கத்தில் சாட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது 'அடுத்த சாட்டை'. இத்திரைப்படத்தில் அதுல்யா நாயகியாக நடிக்க, முதற்பாகத்தை போல சமுத்திரகனி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் இத்திரைப்பட படப்பிடிப்பில், பணியாளர் ஒருவரது காதை விளையாட்டாக பிடித்து இழுக்கிறார் நடிகை அதுல்யா ரவி.
அவரும் நண்பர்கள் தான் இந்த சேட்டையை செய்வதாக நினைத்து, கடிக்க செல்வது போல கர்ஜிக்கிறார், இதனை எதிர்பாராது அதுல்யாவும் அலறிக்கொண்டு ஓட, ஒட்டுமொத்த படக்குழுவும் வயிறு குலுங்க சிரிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Shooting fun #saatai2 😂😂😍😍😍💃💃#helo ட்ரென்டிங் #helo familys #athulya #shootingspot pic.twitter.com/O0ayIA4l6Z— Athulya Ravi (@AthulyaOfficial) March 29, 2019
Social Plugin