Ad Code

Responsive Advertisement

'என் செல்லக்குட்டி'... சாயீஷா இருக்க வர லக்ஸ்மியை கொஞ்சிய ஆர்யா!!!


தமிழ் சினிமாவில் 'ஆர்யா' ஒரு பிளே பாய் நடிகர் என்றே பலராலும் அழைக்கப்படுகிறார். அந்த அளவிற்கு தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருங்கி பழகும் இவர் கிசு கிசுக்களிலும் பஞ்சம் இல்லாமல் சிக்கி இருக்கிறார்.

சென்ற வருடம் கூட, டிவி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பெண் தேடுவதாக அவர் செய்த அலப்பறைகளை மறந்திருக்க மாட்டோம். இந்த சர்ச்சைகளுக்கிடையேயும் இளம் நடிகை சாயீஷாவுடன் அண்மையில் இவருக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது.

இதனை அடுத்து, 'அப்பாடா இனி நடிகைகள் தப்பிச்சாங்க' என கோலிவுட் திரையுலகம் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த சமயத்தில், ,என் அளப்பறைகளுக்கு எண்ட் கார்டே கிடையாது, என ஒரே ஒரு சமூக வலைதள பதிவில் காட்டி விட்டார் ஆர்யா. 

சில நாட்களுக்கு முன் தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார், 'மக்கள் செல்வி' என சமீபத்தில் பட்டம் பெற்ற வரலக்ஷ்மி சரத்குமார். இவருக்கு, 'ஹாப்பி பர்த்டே செல்லக்குட்டி வரும்மா' என தனது பாணியில் வாழ்த்து தெரிவித்திருந்தார் ஆர்யா.

வரும்மாவும், 'நன்றி செல்லக்குட்டி' என ஆர்யாவின் வாழ்த்துக்கு செல்லமாக பதிலளிக்க, ஒட்டுமொத்த சினிமா சார்ந்த, சாராத சிங்கிள்ஸ் கொதித்தெழுந்து விட்டனர்.

நீங்க நடத்துங்க குஞ்சி மணி (திரிஷா செல்லமாக இப்படித்தான் கூப்பிடுவார்) சார்...  

தொடர்புடைய செய்திகள்

பீரில் குளியல் போட்ட நடிகை.... வீடியோ வெளியானதால் கிளம்பும் சர்ச்சை