மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதிலும் மாபெரும் ரசிகர் படையே உள்ளது. இந்திய திரைப்படங்களுக்கு இணையான வசூல் சாதனை புரியும் அளவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்தியாவிலும் உள்ளனர்.
அதன் அடுத்த பிரமாண்ட படைப்பாக உருவாகி இருக்கும் 'அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' திரைப்படத்தில் இந்திய ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரு பாடலை உருவாக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதில் சிறப்பான தகவல் என்னவென்றால், அந்த பாடலுக்கு இசையமைக்க இருப்பது நம் ஆஸ்கர் நாயகன், 'A.R.ரஹ்மான்' தானாம். இப்படி இந்திய ரசிகர்களை ஸ்பெஷலாக ஒரு ஹாலிவுட் நிறுவனம் கருதி இருப்பது ஒருபுறம் இருக்க,
தங்களது பேவரைட் இசையமைப்பாளரும் இந்த பிரமாண்ட படத்தில் இணைந்திருப்பதை ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Social Plugin