Ad Code

Responsive Advertisement

இதுக்குமா செண்டிமெண்ட் பாப்பீங்க அஜித்..? புலம்பும் படக்குழு


என்னதான், நடிப்பை தாண்டி விஞ்ஞான  அறிவிலும் சிறந்து விளங்கினாலும், எதெற்கெடுத்தாலும் சென்டிமன்ட் பார்க்கும் ஒரு மனிதர் நடிகர் அஜித்.

படப்பிடிப்பு துவக்கம் முதல், படம் ரிலீஸ் வரை ஒவ்வொன்றிற்கும் செண்டிமெண்ட் பார்க்கும் அஜித், 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்திலும் அதனை கடைபிடிக்க, 'இதுக்குமா செண்டிமெண்ட் பாப்பீங்க?' என புலம்பி வருகிறது படக்குழு.

அஜித்திற்கு தனது திரைப்படங்களை 10ம் தேதி வெளியிடும் செண்டிமெண்ட் உள்ளது. அதன் படியே, 'வீரம்' ஜனவரி 10, வேதாளம் நவம்பர் 10, விஸ்வாசம் ஜனவரி 10 என தேதியை மையப்படுத்தி வெளியானது.

இதன் வரிசையில், நேர்கொண்ட பார்வை திரைப்படமும் வருகிற, ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் என்ன படக்குழுவிற்கு பிரச்சனை என்றால்,

குறிப்பிட்ட தேதியை ஒட்டி அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வருவதால், இரண்டு நாட்கள் முன்னதாக படத்தை வெளியிட்டால், கூடுதலாக வசூலை அள்ளமுடியும் என்ற புள்ளிவிவரங்கள் தானாம். 


 
இது குறித்து அஜித்திடம் தெரிவித்தும், தேதி விஷயத்தில் விடாப்பிடியாக இருந்து வருவதால், வேறுவழியின்றி அதே தேதியில் ரிலீஸ் செய்யவும் படக்குழு முடிவெடுத்துள்ளது.