நடிகர் பிரிதிவிராஜ் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் லூசிஃபர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடும் விதத்தில் எக்கச்சக்க காட்சிகள்.
வீரம் படத்தில் அஜித்தை பார்த்தது போல, இந்த திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலை பார்க்க முடிந்தது மட்டுமல்லாது, நிறைய பஞ்ச் வசனங்களிலும் தல அஜித் தென்பட்டிருப்பது, ரசிகர்களை குதூகலிக்க செய்துள்ளது.
'தம்பி மயில் வாகனம், நான் தல இல்ல, தல எடுக்குறவன்', 'நீங்க MGRஆ, தலைவரா, இல்ல தலயா?' உள்ளிட்ட அஜித்தை மையப்படுத்தி பேசப்பட்டிருந்த வசனங்களுக்கு அரங்கங்கள் அதிருகிறது.
கேரள திரையுலகில், அஜித்தை விட விஜய்க்கு தான் மவுசு அதிகம் என்ற நிலையிலும், அஜித்தின் ரெஃபெரென்ஸ் மலையாள சூப்பர் ஸ்டார் படத்திலேயே இடம்பெற்றிருப்பது, அவருக்கான மவுசு சாண்டல்வுட்டிலும் வளர்ந்து வருவதை காட்டுவதாக திரையுலகை பேச செய்துள்ளது.
Social Plugin