Ad Code

Responsive Advertisement

நடிகர் அஜித் இந்த IPL அணியின் ரசிகரா..? அவரே சொன்ன தகவல்


உலக பிரசித்தி பெற்ற இந்தியன் பிரிமியர் லீக், 20வது ஓவர் போட்டிகளின் 12வது சீசன் நேற்று கோலாகலமாக துவங்கியது. சாதாரண மக்கள் துவங்கி, திரைத்துறை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலதரப்பட்ட மனிதர்களை கவர்ந்த இந்த போட்டிக்கு நடிகர் அஜித்தும் ரசிகர் என்பது பலர் அறியாத உண்மை.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு IPL போட்டிகள் குறித்து நடிகர் அஜித் அளித்த பேட்டி குறித்த தகவல்கள் இணையத்தை வலம்வர துவங்கியுள்ளது.

குறிப்பிட்ட பேட்டியில், 'என்னதான் நான் கார்பந்தயங்களில் ஆர்வம் கொண்டவனாக இருந்தாலும், பிற விளையாட்டு போட்டிகளை கவனிப்பதும் என் வழக்கம். அப்படி நான் கவனித்தவைகளில் IPL போட்டி மிகவும் பிரமாண்டமான ஒன்று, அதில் நமது சென்னை அணிதான் கில்லி.

Also Read | எல்லை மீறிய 'தளபதி 63' படக்குழு... விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை 

அதன் போட்டிகளை பார்க்க நேரமில்லை என்றாலும், என்ன நடக்கிறது என்பதை கவனித்துக்கொண்டே இருக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் கோப்பையை வெல்ல எனது வாழ்த்துக்கள்' என்று தெரிவித்து, தான் ஒரு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர் என்பதை சொல்லாமல் சொல்லி இருந்தார்.