Ad Code

Responsive Advertisement

ஐஸ்வர்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய வதந்தி...! ஒரு போட்டோ போட்டது குத்தமா..?


முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக பரபரப்பை கிளப்பி இருக்கிறது சமீபத்தில் வெளியான புகைப்படம்.

பாலிவுட்டில்  முன்னணி நடிகையாக வலம்வந்து, அமிதாப் பச்சன் அவர்களின் மகனான, அபிஷேக் பட்சனை கடந்த 2007ம் ஆண்டு மணந்தார் ஐஸ்வர்யா ராய். இந்த  தம்பதிக்கு கடந்த 2007ம் ஆண்டு ஆராத்யா என்ற மகளும் பிறந்தார்.

குழந்தை பெற்றெடுத்த பின்னர் படு குண்டான ஐஸ்வர்யா மீண்டும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறி திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் கணவருடன் கடற்கரையில் நடந்து செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. 


அதில் ஐஸ்வர்யா வழக்கத்திற்கு மாறாக குண்டாக காணப்பட்ட நிலையில், 'அவர் கர்ப்பமாக இருக்கிறாரா?' என ரசிகர்கள் கேள்வி எழுப்ப, ஒரு சில ஊடகங்களில் இரண்டாவது குழந்தை ரெடியாகிவிட்டது என செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் பச்சன் குடும்பத்தினர், தவறான கோணத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டதே ஐஸ்வர்யா குண்டாக தெரிய காரணம் என நட்பு வட்டாரங்களிடம் விளக்கம் அளித்து வருகிறது.