பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழக ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. நடித்த ஓரிரு படங்கள் கைகொடுக்கவில்லை என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தால் தற்பொழுது தொடர்ந்து திரைப்பட வாய்ப்புக்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவரை வைத்து இயக்கிய இயக்குனர் ஒருவர், ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் குறித்து திரையுலக பிரபலங்களிடம் புலம்பி வருகிறாராம்.
ஆரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடித்து வரும், 'அலேகா' திரைப்படத்தினை இயக்கி வருபவர் எஸ்.எஸ். ராஜமித்ரன். இத்திரைப்பட படப்பிடிப்பின் போது, நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வராமல், சிம்புவை போலவே தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா.
இதனால் இவருக்காக முழு படக்குழுவும் காத்திருக்க வேண்டிய சூழலும் அடிக்கடி ஏற்பட்ட நிலையில் பொறுமை இழந்த இயக்குனர், ஐஸ்வர்யாவை திட்டி இருக்கிறார். என்றாலும் தனது தவறை உணராமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்துகொண்டதை போலவே, இயக்குனரிடம் மிகவும் கடுமையாக வாதிட்டும் தற்பொழுது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
சிம்பு ரசிகையும் சிம்புவை போலவே இருந்தா எப்படி?
Social Plugin