சர்ச்சை குறும்பட இயக்குனரான சார்ஜுனின் படைப்பில், லேடி சூப்பர் ஸ்டார் நடித்து வெளியாகி இருக்கும் திகில் திரைப்படம் 'ஐரா'. மாயா, டோரா, காஷ்மோரா என தொடர்ந்து திகில் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் நயன்தாரா இம்முறை இருவேடங்களில் அசத்தி இருக்கிறார்.
கதைக்கரு
பத்திரிக்கையாளரான 'யமுனா' எனும் நயன்தாராவின் கதாபாத்திரம், பெற்றோர்களின் திருமண ஏற்பாடுகளுக்கு உடன்படாமல், கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தஞ்சம் அடைகிறார். அங்கே அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுவது போல ஜோடித்து சமூக வலைத்தளங்களில் ஏமாற்றி கொண்டிருப்பவரை, பல கொலைகளை புரிந்த பவானி எனும் பெண்ணின் ஆத்மா கொல்ல துடிக்கிறது.
'குறிப்பிட்ட பேய் கதாபாத்திரத்திலும் நயன்தாராவே வந்து திகிலூட்ட, அவருக்கு என்ன ஆனது, ஏன் இத்தனை கொலைகள் செய்த பின் யமுனாவை கொல்ல நினைக்கிறார், அவரிடம் இருந்து எப்படி யமுனா தப்பிக்கிறார் என்பது படத்தின் கிளைமேக்ஸ்.
பிளஸ்
வழக்கம் போல நயன்தாரா இந்த திரைப்படத்திலும் நடிப்பில் பின்னி இருக்கிறார். பவானி கதாபாத்திரத்தில் மூலம் ரசிகர்களைகண்ணீர் விட வைக்கும் அளவிற்கு அவரது நடிப்பு இயல்பு.
அமானுஷ்யம் மட்டுமல்லாது எமோஷனல் காட்சிகள் நிறைந்த இரண்டாம் பகுதி, படத்திற்கு பலம்.
திகில் திரைப்படத்திற்கு அத்தியாவசியமான சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை.
'எல்லோருக்கும் சந்தோசமாக வாழ ஆசைதான், ஆனால் வாழ்க்கையே சந்தோசமாக கிடைக்காத ஒருத்திக்கு வாழ்க்கையே ஆசைதான்' உட்பட பல அழுத்தமான வசனங்கள்.
மைனஸ்
வழக்கமான திகில் திரைப்பட காட்சிகள், யோகிபாபு என செல்லும் முதல்பகுதி கவனம் ஈர்க்க தவறுகிறது.
'பவானி கதாபாத்திரம் யமுனாவை கொல்ல துடிக்கும்' காரணம் ஏமாற்றம் அளிக்கிறது.
நயன்தாரா, யோகிபாபு காம்போ இம்முறை ஒர்கவுட் ஆகவில்லை. பெரும்பாலான படங்களை போல இத்திரைப்படத்தில் சும்மா வந்து செல்கிறார்.
மொத்தத்தில், லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், திகில் மற்றும் திரில்லர் திரைப்பட ரசிகர்கள் கண்டிப்பாகவும், பிற தரப்பினர் ஒருமுறையும் பார்க்கக்கூடிய படம் ஐரா.
Social Plugin