Ad Code

Responsive Advertisement

மார்பை காட்டினால் என்ன தவறு.? நடிகை சர்ச்சை பேச்சு


லேசாக உடல் அங்கங்கள் தெரிந்துவிட்டாலே, ரசிகர்கள் திட்டி தீர்த்து விடுவார்கள் என அஞ்சும் இந்திய நடிகைகள் ஒருபுறம் இருக்க, மார்பை காட்டினால் என்ன தவறு என ரசிகர்களையே வறுத்தெடுத்து வருகிறார் பிரபல ஹாலிவுட் நடிகை.

'நடாலி மொரேல்ஸ்' எனும் குறிப்பிட்ட நடிகை, 'லேட் நைட் ஷோ வித் சேத் மேயர்ஸ்' எனும் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டிருந்தார். அதற்கு மார்பகங்கள் தெரிய படுகவர்ச்சி உடை அணிந்து வந்து இருந்த அவரை, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், 'பொது நிகழ்ச்சிக்கு உடை எப்படி அணியவேண்டும் என்கிற விவஸ்தை இல்லையா' என விமர்சனம் செய்ய துவங்கினர்.


அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், 'மார்பை காட்டுவது என்னமோ அறிய நிகழ்வு போல பலர் இங்கு குதித்து கொண்டிருக்கின்றனர். கண், கை, விரலை போல அதுவும் ஒரு உடல் உறுப்புதான். திருந்துங்கள் மக்களே' என காட்டமாக பதிலளித்திருக்கிறார்.