தமிழ் சினிமாவில் போஸ்டர், பேனர் ஒட்டி விளம்பரம் தேடிய காலம் போய் சர்ச்சையை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வது தான் இப்போதையை டிரெண்ட்.
இசைவெளியீட்டு விழாக்களில் நடிகர்களை சண்டைபோட்டுக்கொள்ள சொல்வது, நடிகைகளை கண்ணீர் விட செய்வது, அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் காட்சிகளை படத்தில் வைப்பது என என்னவெல்லாம் செய்தால் பிரச்சனை வருமோ அனைத்தையும் செய்ய தயாராக இருக்கின்றனர் சினிமா பிரபலங்கள்.
இதற்கு நாயகிகள் ஒன்றும் விதிவிலக்கல்ல, சிலவருடங்களுக்கு முன்பு முன்னணியில் கொடி கட்டி பறந்துவிட்டு, இப்பொழுது கேட்பாரற்று கிடக்கும் பப்ளி நடிகையும், இது போன்று சர்ச்சைக்காக கிசு கிசுக்களில் தேடி போய் சிக்கி வருகிறாராம்.
பிரிந்த காதலனுடன் மீண்டும் திரைப்படத்தில் இணைந்தது மட்டுமல்லாது, மீண்டும் காதலிக்க துவங்கியதாகவும் இவர் கிளப்பிய சர்ச்சை பயங்கரமான விளம்பரமாகி போக, அடுத்தடுத்து சர்ச்சைகளில் தன் பெயர் அடிபடுமாறு ஆயத்தமாகி வருகிறாராம்.
Social Plugin